கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ர‌ஜினி?!!!

Sunday,7th of October 2012
சென்னை::ர‌ஜினியை சக்சேனா சந்தித்தார், 240 கோடி சம்பளம் தருகிறேன் முப்பது நாட்கள் கால்ஷீட் தாருங்கள் என்று கேட்டார் என மில்லியன் டாலர் செய்தியொன்று கோடம்பாக்கத்தை சுழற்றியடிக்கிறது. ஆமாம் ர‌ஜினியிடம் பேசியது உண்மைதான், பட் சம்பள விஷயம், அது மேட்டரேயில்லை என அந்த செய்திக்கு இறக்கை தந்தார் சக்சேனா. இப்போது அந்த செய்தி உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனால் ர‌ஜினி கோச்சடையானுக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார் என்ற பழைய செய்தியே இப்போது அதிக வலிமையுடன் வெளிவந்திருக்கிறது. ஆனந்தின் கலை இலாகாவான சுபா ர‌ஜினிக்கேற்ற கதையை உருவாக்குவதில் தீவிரமாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

மாற்றான் படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இருந்தும் தனது அடுத்தப் படத்துக்கான ஹீரோவை இன்னும் தேர்வு செய்யாமலிருக்கிறார் கே.வி.ஆனந்த். அடுத்து ர‌ஜினி படம்தான் அதுதான் இந்த ‌ரிலாக்ஸ் என்கிறார்கள்.

சக்சேனாவா... கே.வி.ஆனந்தா... விரைவில் பூனைக்குட்டி வெளிவரும்.

Comments