ஹீரோக்களை காக்க வைக்கும் காஜல் அகர்வால்!!!

Sunday,7th of October 2012
சென்னை::பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோக்களின் வரவுக்காகத்தான் இயக்குனர்கள் சகிதம் மொத்த யூனிட்டும் காத்திருப்பதுண்டு. ஆனால் காஜர் அகர்வாலோ தனக்காக மற்றவர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கிறார். குறிப்பாக மாற்றான் படத்தில் நடித்தபோது பல நாட்கள் தனது வரவுக்காக கே.வி.ஆனந்த, சூர்யா அடங்கிய படக்குழுவை காக்க வைத்திருக்கிறாராம்.

அதாவது, படப்பிடிப்பு 10 மணிக்கு தொடங்குகிறது என்றால், பத்து மணிக்குத்தான் இவர் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு பிளைட் ஏறுவாராம். அப்படி வருபவர், மதியத்துக்குப்பிறகுதான் ஸ்பாட்டில் தலைகாட்டுவாராம். இதனால் அவருக்காக காத்திருக்க வேண்டாமென்று பல நாட்கள் காஜல் அகர்வால் இல்லாத காட்சிகளாகப்பார்த்து சூர்யாவை வைத்து படமாக்கி வந்திருக்கிறார் கே.வி.ஆனந்த். இதே தவறை காஜல் தொடர்ந்து செய்து வந்தபோதும் இன்னும் முன்னணி நடிகை என்ற தளத்தை விட்டு இறங்காமல் இருப்பதால், பல இயக்குனர்கள் காஜலை அணுசரித்து நடந்து கொள்கிறார்கள்.

Comments