Tuesday,23rd of October 2012
சென்னை::மராட்டியில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் 'மும்பை பூனே மும்பை'. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். தமிழில் இதற்கு 'நீ நான் மட்டும்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஹீரோவாக புதுமுகம் யஷ்வினும், ஹீரோயினாக புதுமுகம் நிகிதா நாராயணும் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிளாக் பாண்டி, தம்பி ராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், பரோட்டா சூரி மற்றும் பலர் நடிக்கிறார். 'ஓடி போலாமா' படத்தை இயக்கிய கண்மணி இப்படத்தை இயக்குகிறார்.
மராட்டி படத்தின் கருவை வைத்துகொண்டு தமிழுக்கு ஏற்றவாறு அதில் சிறு சிறு மாற்றங்கள் செய்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மதுரையை கதைகளமாக கொண்டு உருவாகும் இப்படம், ஒரு நபர் அறிமுகம் இல்லாத புது ஊருக்கு செல்லும் போது அங்கிருக்கும் இடங்களும், சூழ்நிலைகளும் ஒரு புது அனுபவத்தை தரும், அப்படியிருக்க அந்த நபர் ஒரு இளம்பெண்ணாக இருந்து அறிமுகமே இல்லாத ஒரு ஊருக்கு சென்று அங்கு ஒரு இளைஞனை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் எந்த வகையான அனுபவத்தை கொடுக்கும் என்பதையும், அவர்களது குறுகியகால இந்த உறவு எத்தகையது மாற்றங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்துகிறது என்பதை சொல்கிறது.
மராட்டிய படத்திற்கு இசையமைத்த அவினஷ் - தர்மதேஜா தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். இவர்களுடன் தர்மதேஜா என்பவரும் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment