Monday,8th of October 2012
சென்னை::செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது நிஜமா என்றதற்கு பதில் அளித்தார் சிம்பு. கோலிவுட்டில் சிம்பு, தனுஷ் கடும் போட்டியாளர்கள். ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கி படங்களில் வசனம் வைப்பது முதல் பல விஷயங்களில் கருத்து மாறுபாடு காட்டுபவர்கள். இதனால் தனுஷின் அண்ணன் செல்வராகவனும் சிம்புவும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பேசிக்கொள்ளாமல் தலை கவிழ்ந்துகொண்டு சென்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. சமீபகாலமாக சிம்பு, தனுஷ் இடையே திடீர் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வராகவனும் சிம்புவும் புதிய படத்தில் இணைய உள்ளனர் என்ற தகவல் கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன், ‘மயக்கம் என்ன, ‘புதுப்பேட்டை ஆகிய படங்களை இயக்கிய அவரது அண்ணன் செல்வராகவன் சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாறுபட்ட காதல் கதை அம்சம்கொண்ட இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இது பற்றி சிம்புவிடம் கேட்டபோது, இப்படம் பற்றி இப்போதைக்கு பேசுவது முந்திரிக்கொட்டை சமாச்சாரமாக இருக்கும். ஆனால் இதுபற்றி செல்வராகவனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில்தான் இப்படத்தின் பணிகள் தொடங்க உள்ளன. பெரிய தயாரிப்பு நிறுவனம் இதை தயாரிக்க உள்ளது என்றார்.

Comments
Post a Comment