Saturday,13th of October 2012
சென்னை::சைத்தான் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிஜாய் நம்பியாரின் புதிய படம் டேவிட். இதில் விக்ரம் ஹீரோ என்பதும், ஜீவா டேவிட்டின் தமிழ் பதிப்பில் முக்கிய வேடத்தில் நடிப்பதும் ஏற்கனவே பலமுறை பேசப்பட்ட விஷயங்கள். தமிழில் ஜீவா நடிக்கும் வேடத்தை இந்தியில் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். தமிழ், இந்தி இரு மொழிகளிலும் விக்ரம் ஹீரோ.
குழந்தை பெற்றுக் கொண்ட லாரா தத்தா அதன் பிறகு நடிக்கும் முதல் படம் டேவிட் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இது தவிர தபு, இஷா ஷெர்வானி என்று வேறு சிலரும் உண்டு. முக்கியமாக நம்மூர் நாசர்.
விக்ரமின் முதல் இந்திப் படமாக இருக்கப் போகிற டேவிட்டின் ரிலீஸ் தேதியை பிஜாய் நம்பியார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 11ஆம் தேதி டேவிட் மும்மொழிகளில் வெளியாகிறது.
ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் டேவிட்டை தயாரித்துள்ளது.
Comments
Post a Comment