Wednesday,10th of October 2012
சென்னை::இன்று நடைபெற்ற 'துப்பாக்கி' இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஷை குட்டி மணிரத்னம் என்று வாழ்த்தி பேசினார்.
தலைப்பு தகராறுக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்த கலைப்புலி எஸ்.தாணு இன்று (அக்.10) துப்பாக்கி படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தினார். இந்த விழாவில் விஜய், காஜல் அகர்வால், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயரஜ், எஸ்.ஏ.சந்திரசேகர், பாடலாசிரியர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், விவேகா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய கலைப்புலி எஸ்.தாணு, "துப்பாக்கி போன்ற ஒரு படத்தை நான் தயாரிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு நான் பெரிதும் நன்றி சொல்லியாக வேண்டும். இந்த படத்திற்காக நான் பல நேரங்களில் பண நெருக்கடிகளை சந்தித்த போது, விஜய் எனக்கு பெரிதும் உறுதுனையாக இருந்தார். நான் சமீபத்தில் ரஜினி சாரை சந்தித்துப் பேசியபோது, இப்படத்தைப் பற்றியும், விஜய் மற்றும் முருகதாஷைப் பற்றியும் ரஜினி சார் விசாரித்தார். இந்தப் படம் நான் தயாரித்த படங்களிலேயே எனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும்." என்றார்.
முருகாதாஸ் பேசுகையில், "நான் உதவி இயக்குநராக இருந்தபோதே விஜய் சாருடன் படம் பண்ண வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அது மிஸ்ஸாகி கொண்டே வந்தது. இப்போது தான் நாங்கள் இணைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க எஸ்.ஏ.சி தான் காரணம். அவர் தான் என்னிடம் வந்து விஜய்க்கு ஒரு படம் பண்ண வேண்டும் என்றார்.
எனக்கு விஜய் சாரைப் பிடிக்கும், அதைவிட அவருடைய இமேஜ் ரொம்ப பிடிக்கும். ரசிகர்களுக்கிடையே ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக வலம்வரும் விஜய் சாரை இயக்கும்போது எனக்கே அது ஒரு புது அனுபவமாக இருந்தது. இப்படத்திற்காக் விஜய் ஹிந்தியெல்லாம் பேசியிருக்கிறார். அதுவும் சாதரண சவுக்கார் பேட்டை ஹிந்திப்போல இல்லாமல், மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழன் ஒருவன் எப்படி ஹிந்தி பேசுவானோ அதுபோல ஹிந்தியை தெளிவாக பேசியிருக்கிறார். மும்பையில் படப்பிடிப்பு நடத்தியபோது, விஜயை பார்த்த பொதுமக்கள், ரொம்ப ஸ்மார்ட்டான ஹீரோவாக இருக்கிறாரே, என்று சொன்னார்கள். அப்போதுதான் எனக்கு ஒரு ஐடியா வந்தது. ஏன் நம்ம விஜய் சாரை வைத்து ஒரு நேரடி ஹிந்திப் படத்தை இயக்க கூடாது என்று. காலம் கைகூடினால் கண்டிப்பாக அப்படி ஒரு படத்திலும் நாங்கள் இணைவோம்." என்றார்.
விஜயை பேசை அழைத்தப்போது, எப்போதும் போல சிறிது நேரம் மெளன மொழியில் பேசியவர், நிருபர் ஒருவரின் வேண்டுகோளுக்கினங்க, படத்தில் அவர் பாடியா "கூகுல்.." பாடலின் சில வரிகளைப் பாடினார். பிறகு பேச துவங்கியவர், "எனது கேரியரில் துப்பாக்கி ரொம்ப முக்கியமான படம். இந்த படத்திற்காக முருகதாஸ் ரொம்பவே உழைத்திருக்கிறார். என்னுடன் நடித்த காஜல் அகர்வாலின் பெரியலியே ஸ்வீட் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறே அவரும் ரொம்ப ஸ்வீட்டான கேர்ளாக படத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் சாராக இருக்கட்டும், முருகதாஸாகட்டும் இந்த படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் என்னைக் காட்டியிருக்கிறார்கள்." என்று கூறிய விஜய், இறுதியாக நான் ஒன்று சொல்கிறேன், முருகதாஷுக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன். அது என்னவென்றால் "குட்டி மணிரத்னம்" என்பதுதான்." என்றார்.
ஹாரிஸ் ஜெயராஜ் பேசும் போது துப்பாக்கி படம் பத்து காக்க காக்க படத்திற்கு சமமான படமாக வந்திருக்கிறது என்றார்.

Comments
Post a Comment