மீண்டும் சொந்தப் படம் எடுக்க தயரானார் இயக்குநர் ஷங்கர்!!!

Sunday,21st of October 2012
சென்னை::தொடர்ந்து தான் தயாரித்தப் படங்கள் தோல்வியை சந்தித்ததால், தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸை மூடிய இயக்குநர் ஷங்கர், மீண்டும் அந்நிறுவனத்தின் மூலம் படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்.

பிரமாண்ட இயக்குநர் என்று தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த ஷங்கர், எஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் தரமான படங்களை தயாரித்து வந்தார். காதல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, வெயில், ஈரம் என்று அடுத்தடுது வெற்றிப் படங்களை கொடுத்து வந்த எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயார்ப்பில் வெளியான, இரட்டை சுழி, அனந்தபுரத்து வீடு போன்றப் படங்கள் தோல்வி அடைந்ததால் படம் தயாரிப்பதை நிறுத்தியது.

தற்போது மீண்டும் படங்கள் தயாரிக்க ஷங்கர் முடிவு செய்திருக்கிறாராம். எழுத்தாளர் ராஜூ முருகன் சொன்ன ஒரு கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போகவே, அப்படத்தை தானே தயாரிக்க முன்வந்திருக்கிறார்.

இப்படம் வெற்றி பெற்றால், தொடர்ந்து படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கும் ஷங்கர், அப்படியே தான் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

Comments