வல்லிய டைரக்டருங்க படங்கள்லதான் நடிப்பேன்- லட்சுமிமேனன்!!!

Monday,8th of October 2012
சென்னை::கும்கி படத்தில் பிரபுசாலமனால் அறிமுகம் செய்யப்பட்டவர் கேரளத்து வரவு லட்சுமிமேனன். ஆனால் அதன்பிறகு சசிகுமாருக்கு ஜோடியாக அவர் நடித்த சுந்தரபாண்டியன் படம் முதலாவதாக வெளியாகி லட்சுமிமேனனை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. இந்த நிலையில், பிரபுசாலமன், சசிகுமார் இருவருமே அம்மணியின் நடிப்பு குறித்து பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளியதால் பசங்க பாண்டிராஜ் உள்பட சில இயக்குனர்கள் தங்கள் படங்களிலும் லட்சுமிமேனனை நடிக்க வைக்க அணுகினர். ஆனால் இப்போதைக்கு படிக்க வேண்டியிருக்கு. அதனால் நடித்துள்ள இரண்டு படங்களும் வெளியான பிறகுதான் புதுப்படங்களில் நடிப்பேன் என்று அந்த வாய்ப்புகளை நிராகரித்து விட்டார் நடிகை.


ஆனால் அவற்றை தவிர்த்தது படிக்க வேண்டும் என்பதற்காக இல்லையாம். அம்மணி எதிர்பார்ப்பது பெரிய டைரக்டர்களின் படங்களாம். சுந்தரபாண்டியனில் நடித்ததுகூட சசிகுமாருக்காகத்தானாம். அதனால் இப்போது கேரளத்தில் இருந்து கொண்டே கோடம்பாக்கத்தின் முன்னணி டைரக்டர்களின் படங்களுக்கு தூண்டில் போட்டு வருகிறார் லட்சுமிமேனன். அவரது பட்டியலில் மணிரத்னம், ஷங்கர், பாலா போன்ற டைரக்டர்கள் முதல்வரிசையில் இருக்கிறார்களாம்

Comments