Saturday,20th of October 2012
மும்பை:: நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். கரீனா மதம் மாறாமல் இருப்பதால், முஸ்லிம் மத சட்டப்படி இந்த திருமணம் செல்லாது என்று முஸ்லிம் அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் அறிவித்துள்ளது.
முதல் மனைவியை விவாகரத்து செய்த சலீப் அலிகான், நடிகை கரீனா கபூரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்து மதத்தைச் சார்ந்த கரீனா கபூருக்கு, இஸ்லாமிய மதத்தினரான சயீப், தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், கரீனா கபூர் முஸ்லிம் மதத்துக்கு மாறாமல் திருமணம் செய்துகொண்டதால் இந்த திருமணத்திற்கு கண்டனம் தெரிவித்த முன்னணி முஸ்லிம் அமைபான தாருல் உலூம் தியோபந்த் இந்த திருமணம் செல்லாது என்றும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சயீப் அலிகான்-கரீனா கபூர் திருமணம் முஸ்லிம் மத சட்டத்துக்கு விரோதமானது. திருமணத்துக்கு முன் கரீனா கபூர் முஸ்லிம் மதத்துக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் அவர் மதம் மாறவில்லை. எனவே இந்த திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்காது" என்று குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment