Sunday,7th of October 2012
சென்னை::சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ள ‘மாற்றான்’ படம் வருகிற 12-ந்தேதி ரிலீசாகிறது. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார்.
பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்த சாருலதா படம் சமீபத்தில் ரிலீசானது. பழிவாங்கும் பேய் கதையாக அப்படம் வந்தது. ஆனால் மாற்றான் படம் வேறு கதை களத்தில் தயாராகியுள்ளது.
இப்படம் வெளிநாட்டு படங்களின் தழுவல் இல்லை என்று சூர்யா தெளிவுபடுத்தி உள்ளார். இந்த படம் ரிலீசையொட்டி விஜய்யின் துப்பாக்கி மற்றும் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் டிரெய்லர்கள் தியேட்டர்களில் வெளியிடப்படுகின்றன.
துப்பாக்கி டிரெய்லர் 10-ந்தேதியும், பாடல் சி.டி. 11-ந்தேதியும் வெளியிடப்படுகிறது. அலெக்ஸ் பாண்டியன் டிரெய்லர் 12-ந்தேதி வருகிறது. இது போல் சிம்புவின் போடா போடி டிரெய்லரும் வருகிறது.
விஜய்யின் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு சர்ச்சைகள் கிளம்பின. ‘கள்ளதுப்பாக்கி’ என்ற பெயரில் படம் எடுப்பவர்கள் கோர்ட்டுக்கு சென்று ‘துப்பாக்கி’ தலைப்பை பயன்படுத்த தடை கேட்டனர். தற்போது இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டு உள்ளது. வழக்கும் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. துப்பாக்கி பெயரிலேயே விஜய் படம் வெளியாகிறது. 1 1
Comments
Post a Comment