கடந்து போனதை பற்றி கவலை இல்லை : தமன்னா!!!

Monday,1st of October 2012
சென்னை::கடந்து போன சம்பவத்தை பற்றி கவலை இல்லை. இப்போது நடப்பதுதான் நிஜம் என்றார் தமன்னா. தமிழில் முன்னணி இடத்துக்கு வந்துகொண்டிருந்த தமன்னா, திடீரென்று தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு பிறமொழியில் கவனம் செலுத்துகிறார். இதற்கு காரணம் காதலில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான் என்று கூறப்படுகிறது. இது பற்றி தமன்னா கூறியதாவது: பாலிவுட்டில் ‘ஹிம்மத்வாலா, டோலிவுட்டில் ‘கேமராமேன் கங்கா தோ ராம்பாபு, ‘பலே தம்முடு படத்தில் நடிக்கிறேன். லாரன்ஸ் இயக்கத்தில் ‘ரெபெல் படத்தில் ஹிப் ஹாப் நடன டீச்சராக நடித்தேன்.

இவரது இயக்கத்தில் நடித்தபிறகு நடனத்தின் மீதான என் கருத்தை மாற்றிக்கொண்டேன். எதன் மீதாவது நம்பிக்கை வைத்து உழைத்தால் அதுவே அதை அடைவதற்கான புதிய சக்தியை தரும் என்பதை புரிந்துகொண்டேன். ‘தமிழ் படங்களில் ஏன் நடிப்பதில்லை? என்கிறார்கள். நடிகர்கள் இப்போது உலக அளவில் சென்றுவிட்டார்கள். இதனால் இன்னொரு மொழியை நோக்கி நடிகர்கள் ஓட வேண்டிய அவசியம் இல்லை. தமிழில் நிறைய படங்களில் நடிக்க எண்ணுகிறேன்.

நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் நடிப்பேன். ‘தமிழில் நடிக்காமல் இருப்பதற்கு ஏதாவது மனவருத்தம் காரணமா? என்கிறார்கள். அப்படி எந்த மனவருத்தமும் இல்லை. கடந்துபோனவற்றை எண்ணி கவலைப்படும் ஆள் நான் கிடையாது. இப்போது எது நல்லதாக தெரிகிறதோ அதை மட்டுமே நம்புகிறேன். அதுவே நிஜம். இவ்வாறு தமன்னா கூறினார்.

Comments