துளசி எனக்கு போட்டியா? : கார்த்திகா பேட்டி!!!

Monday,22nd of October 2012
சென்னை::தங்கை துளசி தனக்கு போட்டியா என்பதற்கு பதில் அளித்தார் கார்த்திகா. அவர் கூறியதாவது: பாரதிராஜா இயக்கும் ‘அன்னக்கொடியும் கொடி வீரனும் ஷூட்டிங் தேனியில் நடந்தது. தற்போது அருண் விஜய்யுடன் நடிக்கும் ‘டீல் பட ஷூட்டிங்கும் மீண்டும் தேனியில் நடக்கிறது. எனக்கும் தேனிக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கும் என்று நினைக்கிறேன். ‘டீல்Õ படம் கமர்ஷியல் மசாலாவுடன் கூடிய காதல் கதையாக இருந்தாலும் இப்படத்திற்கான ஷூட்டிங் நடத்தவும் பொருத்தமான லொகேஷனாக தேனி அமைந்திருக்கிறது. அடுத்து புதுமுக இயக்குனர் சிவஞானம் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். மலையாளத்தை பொறுத்தவரை சமீபத்தில் 3 படங்களின் ஸ்கிரிப்ட் கேட்டேன்.

ஒவ்வொன்றும் வித்தியாசமானது. இம்மாத இறுதியில் அப்படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளேன். எனது தங்கை துளசி நடிக்கும் ‘கடல் படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. அடுத்து அவர் நடிக்கும் ‘யான் டிசம்பரில் தொடங்க உள்ளது. நடிப்புக்கும் படிப்புக்கும் இடையில் அவர் சுழன்றுக்கொண்டிருக்கிறார். ‘தங்கையும் நடிகையாக வருவது போட்டியா?என்கிறார்கள். அவர் திரையுலகுக்கு வருவது மகிழ்ச்சி. என் அம்மாவும், அவரது சகோதரி அம்பிகாவும் திரையுலகில் இருந்தனர். அந்த காலத்தில் பத்மினி, ராகினி சகோதரிகள் சாதனை படைத்திருக்கிறார்கள். இரட்டை சகோதரிகள் போல் நாங்களும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

Comments