சென்னை வங்கி லாக்கரில் கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சி டிஸ்க் பாதுகாப்பு!!!

Wednesday,10th of October 2012
திருவனந்தபுரம்: நடிகை ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சி அடங்கிய டிஸ்குகள், பலத்த பாதுகாப்புடன் இரண்டு வங்கிகளின் லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ளன. மலையாள இயக்குனர் பிளஸ்சி ‘களிமண் என்ற பெயரில் மலையாள படம் இயக்கி வருகிறார். கர்ப்பிணி பெண்ணுக்கும் வயிற்றில் உள்ள கருவுக்கும் இடையே உள்ள ஆத்ம பந்தத்தை சொல்லும் கதை. இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் கர்ப்பிணியானதால் அவரை கதாநாயகி ஆக்கினார். இவர், தமிழில் ‘நான் அவன் இல்லை 2‘, ‘அரவான்‘ படங்களில் நடித்துள்ளார். ஸ்வேதா கர்ப்பிணியான ஐந்தாவது மாதம் முதல் குழந்தை பிறக்கும் வரை அத்தனை நிகழ்வுகளையும் காட்சிகளாக எடுக்க தீர்மானித்திருந்தார் பிளஸ்சி. இதன்படி கடந்த சில மாதங்களாக ஸ்வேதாவின் கர்ப்ப கால நிகழ்வுகளை படம் பிடித்தார். இதே போல பிரசவத்தையும் படம்பிடிக்க திட்டமிட்டிருந்தார்கள். இதற்கு ஸ்வேதாவின் கணவர் ஸ்ரீவல்சனும் அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மும்பை மருத்துவமனையில் ஸ்வேதா மேனனுக்கு பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் அனுமதியுடன் இதை மூன்று கேமரா உதவியுடன் பிளஸ்சி படம் பிடித்தார். இந்த காட்சிகள் அடங்கிய டிஸ்குகள் சென்னையில் உள்ள இரண்டு வங்கிகளின் லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டன. படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் ஜனவரியில் தொடங்குகிறது. அதன்பிறகு இந்த டிஸ்குகள் எடுக்கப்பட்டு படத்தில் இணைக்கப்ட இருக்கிறது.

Comments