சித்தார்த்துடன் இணைகிறார் சந்தானம்!!!

Friday,26th of October 2012
சென்னை::சித்தார்த் மற்றும் சந்தானத்தை கூட்டணி சேர்த்து ஒரு நகைச்சுவை படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர் சி.
நடிகர் கார்த்தி, பரத், ஜீவா, ஆர்யா என பெரும்பாலான கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து தூள் கிளப்பியுள்ள சந்தானம், விரைவில் சித்தார்த்துடன் இணைந்து காமெடியில் கலக்கோ கலக்கு என்று கலக்க உள்ளார்.
இதனை இவ்வளவு உறுதியோடு சொல்லக் காரணமே, படத்தின் இயக்குநர்தான். பொதுவாகவே நகைச்சுவை சார்ந்த படங்களை சிறப்பாக இயக்கும் சுந்தர் சி, சந்தானத்தை வைத்து எப்படி படம் எடுப்பார் என்று தமிழ் ரசிகர்களுக்கு நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
சுந்தர் சி, தற்போது விஷாலை வைத்து இயக்கி வரும் மத கஜ ராஜா படத்தை முடித்துவிட்டு, சந்தானம் - சித்தார்த்தை வைத்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக கூறுகிறார்.
இது கலகலப்பு படத்தின் தொடர்ச்சியா என்று கேட்டதற்கு, நிச்சயமாக இல்லை. இது முற்றிலும் வேறுபட்ட கதையாக அமையும் என்கிறார் சுந்தர் சி.

Comments