சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் மாற்றான்!!!

Wednesday,17th of October 2012
சென்னை::-

5. சாட்டை

ஐந்தாவது இடத்தில் சாட்டை. கல்வியை மையமாக வைத்து வெளிவந்த இந்தப் படம் விமர்சகர்களுக்கு பிடித்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. நான்கு வாரங்கள் முடிவில் அதாவது கடந்த 14ஆம் தேதி வரை இப்படம் சென்னையில் 54.5 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 1.8 லட்சங்கள். வார நாட்களில் வசூல் 3.6 லட்சங்கள்.

4. இங்கிலீஷ் விங்கிலீஷ்

வார நாட்களில் ஸ்ரீதேவியின் படம் 18.4 லட்சங்களையும், வார இறுதியில் 13.4 லட்சங்களையும் வசூலித்துள்ளது. பத்து தினங்களில் இதன் வசூல் 56.3 லட்சங்கள்.

3. தாண்டவம்

வார இறுதியில் தாண்டவத்தின் வசூல் - மாற்றான் காரணமாக அதலபாதாளத்துக்கு சென்றது. வார நாட்களில் 32 லட்சங்களை வசூலித்த இப்படம் வார இறுதியில் 9.4 லட்சங்களாக கீழிறங்கியது. இதன் இதுவரையான சென்னை வசூல் 4.7 கோடிகள்.

2. சுந்தரபாண்டியன்

இந்த மாதத்தின் சர்ப்ரைஸ் சக்சஸ் சுந்தரபாண்டியன். சென்னையில் இதுவரை 6.4 கோடிகள் வசூலித்துள்ளது. இதன் வார இறுதி வசூல் 18.1 லட்சங்கள். வார நாட்கள் வசூல் 33.7 லட்சங்கள்.

1. மாற்றான்

முதலிடத்தில் மாற்றான். சென்னையில் ஓபனிங் மூன்று தினங்களில் இரண்டு கோடிகளை சர்வசாதாரணமாக பெ‌ரிய படங்கள் வசூலிக்கின்றன. மாற்றான் 3 கோடி வசூலிக்கும் என்று பார்த்தால் 2.23 கோடியே வசூலித்துள்ளது. படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்புடன் ஒப்பிடுகையில் இது சற்று ஏமாற்றம்தான்.

Comments