Wednesday,17th of October 2012
சென்னை::செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதனை காண லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்-பெண் பக்தர்கள் திரண்டிருந்தனர்.
இரவு 9 மணி அளவில் கவர்ச்சி நடிகை ஷகிலா, 'அய்யா வழி' பட கதாநாயகி சுஜிபாலாவுடன் சேர்ந்து கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தார். ஊஞ்சல் உற்சவத்துக்காக கோவில் வாசலில் திரண்டிருந்தவர்களில் சிலர் நடிகை ஷகிலாவை கண்டனர்.
இந்த தகவல் பரவியதும் அவரது ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு ஷகிலாவை நோக்கி வந்தனர். சிறிது நேரத்தில் ரசிகர்கள் அவரை சுற்றி மொய்த்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்வத்துடன் சூழ்ந்துவிட்ட ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து தப்ப முடியாமல் ஷகிலாவும், சுஜிபாலாவும் தவித்தனர். இதுபற்றி அறிந்ததும் உடனே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்தனர். நடிகைகள் 2 பேரையும் ரசிகர்களிடம் இருந்து மீட்டு பத்திரமான இடத்துக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
பின்னர் ஷகிலாவும், சுஜிபாலாவும் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து ஊஞ்சல் உற்சவத்தை கண்டுகளித்தனர். பயபக்தியுடன் அவர்கள் அம்மனை வழிபட்டு விட்டு போலீஸ் பாதுகாப்புடன் கார் நிறுத்திருந்த இடத்துக்கு சென்றனர். பிறகு காரில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
Comments
Post a Comment