Tuesday, 16th of October 2012
சென்னை::*பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் புனே அருகே கிராமத்தில் நடந்தது. அங்கு திடீரென்று பாம்புகள் படையெடுத்ததால் நாயகி ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பட குழு ஓட்டம் பிடித்தது. லோக்கல் பாம்பாட்டிகளை வைத்து பாம்புகளை பிடித்தபிறகே ஷூட்டிங் நடந்தது.
*சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த உலக மாநாட்டில் தலாய்லாமாவுடன் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அப்போது ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது இந்தியாதான் என்று ரகுமானிடம் தலாய்லாமா குறிப்பிட்டாராம்.
*பாலிவுட்டில் சைப்-கரீனா திருமண விழாவில் சைப்பின் முதல் மனைவி குழந்தைகள் சாரா, இப்ராகிம் பங்கேற்கின்றனர்.
*இணையதளத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஹாலிவுட்டில் மிகவும் சக்திவாய்ந்த ஹீரோவுக்கான போட்டியில் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரைக் முதலிடம் பெற்றிருக்கிறார்.
*அமிதாப்பச்சன் பிறந்தநாள் முடித்துவிட்டு விமானத்தில் சென்னை திரும்பிய ரஜினியின் அருகில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் அமர்ந்திருந்தார். விஷாலின் ‘சமர் படத்தில் வில்லனாக நடிக்கும் இவர், ரஜினியுடன் சினிமா பற்றி பேசியபடியே பயணித்தாராம்.
*கவுதம் மேனனின் ‘நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் நடிக்கும் சந்தானம், கவுதம் இயக்கிய ‘காக்க காக்க உள்ளிட்ட முந்தைய படங்களின் கதாபாத்திரங்களை மையமாக வைத்தே காமெடி ரகளை நடத்தி இருக்கிறாராம்.
‘சொன்னா புரியாது படத்தில் சிவா ஜோடியாக வசுதத்ரா கஷ்யப் நடிக்கிறார். இவர் ‘போராளி படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தவர்.
பாலிவுட்டில் அறிமுகமான பிருத்விராஜ், சிக்ஸ் பேக் உடல்கட்டுடன் நடித்தார். தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம்.
* ‘பைவ் ஸ்டார்’, ‘வரலாறு’ படங்களில் நடித்த கனிகா கணவரோடு அமெரிக்காவில் செட்டிலானார். தற்போது இருப்பிடத்தை இந்தியாவுக்கே மாற்ற உள்ளார். மீண்டும் படங்களில் நடிக்கவும், இந்திய கலாசாரப்படி மகனை வளர்க்கவும் இந்த இடமாற்றமாம்.
* ரஜினியின் பிறந்த தினத்தன்று வெளிவருவதாக இருந்த ‘கோச்சடையான்’ பொங்கல் தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்துடன் 3டி படமாக வெளி வருகிறது.
* ‘ரெண்டாவது படம்’ பட முக்கிய கதாபாத்திரம் இறக்கும் காட்சிக்காக பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார் மதன் கார்க்கி. இதற்காக வித்தியாசமான குரல் தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர்.
* சிம்பு தனது பெயரை எஸ்டிஆர் என்று மாற்றிக்கொண்டார். அதுபோல் பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் தனது பெயரை எஸ்ஆர்கே என்று இனிஷியலுக்கு மாற்றிக்கொண்டதுடன் அதை மற்றவர்கள் பயன்படுத்தாத வண்ணம் டிரேட் மார்க்காக பதிவு செய்துகொண்டிருக்கிறார்.
* ‘அம்முவாகிய நான்’ படத்தை இயக்கிய பத்மாமகன் விமல், பிரசன்னா உள்ளிட்ட 7 ஹீரோக்கள் நடிக்கும் ‘கூத்து’ படத்தை இயக்குகிறார்.
Comments
Post a Comment