இது இந்திக்கு சுட்ட தோசை - இயக்குனரின் திடீர் டுமீல்!!!

Friday,26th of October 2012
சென்னை::இதுவரை எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ரிலீஸ் நேரத்தில் முருக தாசருக்கு என்ன தோன்றியதோ. இல்லை இனி அரிச்சந்திரனாவது என்று முடிவு ஏதும் எடுத்தாரோ தெரியவில்லை. தீபாவளிக்கு வெடிக்கவிருக்கும் தனது டுமீல் படம் தளபதிக்காக சுட்டதில்லை இந்திக்காக சுட்ட தோசை என்று ஒரு ராக்கெட் வெடி வீசியிருக்கிறார்.

டுமீலின் கதைக்களம் மும்பை என்பதால் இந்திவாலா ஹீரோவுக்காகதான் இந்தக் கதையை எழுதினேன். அவர் நைன்டி டேய்ஸ் நோ கால்ஷீட் என்றதால் தளபதிக்கு தாவிட்டேன் என்று யாரும் கேட்காமலே கூவியிருக்கிறர்.

காலம் அறியாமல் கூவிய சேவல், வேறென்ன சொல்ல!

Comments