Thursday,18th of October 2012
சென்னை::கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து 7 மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக இருக்கிறார்.
டெலிவிஷன்களில் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் இன்று காலை தனது தாயார் பத்மாசினியுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு 2 புகார் மனுக்கள் கொடுத்தார். ஒரு மனுவில் சின்மயி கூறியிருப்பதாவது:-
வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கஜேந்திரகுமார் என்பவர் எனக்கு ரூ.12 லட்சம் பணம் தரவேண்டும். பலமுறை கேட்டும் அவர் பணம் தராமல் காலம் கடத்திக்கொண்டு வருகிறார். எனவே ரூ.12 லட்சம் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மற்றொரு புகார் மனுவில் சின்மயி கூறியிருப்பதாவது:-
டுவிட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.
பின்னர் சின்மயி நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீப காலமாக டுவிட்டர் இணையதளத்தில் அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும் மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.
இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.
குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும் என்னை? பற்றி நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம் மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் யார் என்ற விவரங்களையும், 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்.
எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன். எனவே இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாய் பத்மாசினி கூறும்போது, சின்மயி பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவால் வளர்ச்சி அடைந்து உள்ளார். அவரது பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் செயல்படுபவர்களை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றார்.

Comments
Post a Comment