Monday,15th of October 2012
சென்னை::சோகத்தை மறக்க சினிமாவும் எனது குடும்பமும்தான் எனக்கு பெரும் உதவியாக உள்ளது என்கிறார் நயன்தாரா. சிம்புவை காதலித்து பிரிந்த நயன்தாரா, அதன்பின் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீரென பிரிந்தனர். இது குறித்து அதிகம் பேசாமல் இருந்தார் நயன்தாரா. இந்நிலையில் ஆந்திர அரசின் நந்தி விருதுக்காக அவர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை அவர் பெற உள்ளார். இது குறித்து நயன்தாரா கூறியதாவது: ஸ்ரீராம ராஜ்யம் படம் நான் எதிர்பார்க்காமல் எனக்கு கிடைத்தது. கவர்ச்சி வேடங்களில் இருந்து ஒதுங்கி, குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்தபோது இப்படம் கிடைத்தது. அப்போது எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் நான் அமைதி காத்தேன். இந்த படம் மூலம் விமர்சகர்களுக்கு பதில் அளித்தேன். அது எல்லாம் சீதை வேடத் தில் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதால் நடந்தது. தொடர்ந்து ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண கதை படங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் வித்தியாசமான பெண், எந்த நிலையிலும் வெற்றி பெறுபவள் என சிலர் கூறலாம். ஆனால் நான் மற்றவர்களை போல் சாதாரணமானவள்தான். குளிர், மழை, வெயில் என எந்த சீசனிலும் உழைத்துக் கொண்டே இருப்பது எனக்கு பிடித¢தது. சினிமாதான் எனக்கு எல்லாமே. எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள், இதயம் உடைந்த சம்பவங்கள் (காதல் தோல்விகள்) ஆகியவற்றிலிருந்து என்னை மீட்டது சினிமாதான். எனது சோகத்தை மறக்கச் செய்த மருந்து, எனது பணிதான். அதே போல் எனது குடும்பமும் எனக்கு உறுதுணையாக இருநதது. இவ்வாறு நயன்தாரா கூறினார்.
Comments
Post a Comment