திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டி- நடிகை சந்தியா தொடங்கி வைத்தார்!!!

Sunday,14th of October 2012
சென்னை::'அழகிய திருமதி-ஃபேஸ் ஆப் தமிழ்நாடு குயின் ஆப் மதர்ஸ் (Face of TamilNadu Queen of Mother's) என்ற தலைப்பில் திருமணமான பெண்களுக்கா அழகிப் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது.

எல்.எக்ஸ்.ஜி இண்டெர்நேஷனல் என்ற நிறுவனம் நடத்தும் இப்போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட 35 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். சென்னை, சேலம், கோயமுத்தூர், மதுரை ஆகிய பகுதிகளில் இதற்கான தேர்வு நடைபெறுகிறது. இவற்றில் இருந்து தேர்வு செய்யப்படும் 16 பேர் சென்னையில் நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்வார்கள்.

இந்த அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதில் திரையுலகைச் சார்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா மற்றும் இதில் கலந்துகொள்பவர்களின் தேர்வு நேற்று (அக்.12) சென்னை, ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் நடிகை சந்தியா, இயக்குநர் கிச்சா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

இந்த அழகிப் போட்டியைப் பற்றி கூறிய எல்.எக்ஸ்.ஜி நிறுவனத்தின் சி.இ.ஒ எம்.ஏ.வதுத் "இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் நம் தமிழ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்த கூடியதாகும்." என்றார்.

Comments