Saturday,20th of October 2012
சென்னை::சிரஞ்சிவி மகன் ராம் சரண் நடித்த ‘மாவீரன்’, ‘ரகளை’, ‘சிறுத்தைப்புலி’ போன்ற டோலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி ரிலீஸ் ஆனது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த ‘ஆரஞ்ச்’ என்ற படம் தமிழில் ‘ராம் சரண்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. கதாநாயகியாக ஜெனிலியா நடித்துள்ளார். பிரபு, பிரகாஷ்ராஜ், பூஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காதல் என்பது சீக்கிரமே கருகிப்போகும் விஷயம் என்று ஹீரோவும், காதல் நீடித்து நிலைக்கக்கூடியது என்று எண்ணும் ஹீரோயினுக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை. பி.ராஜசேகர் ஒளிப்பதிவு. பாஸ்கர் இயக்கம். வசனம் ஏஆர்கே.ராஜராஜன். தயாரிப்பு எஸ்.சுந்தரலட்சுமி. இதன் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
Comments
Post a Comment