Sunday,7th of October 2012
சென்னை::திரைப்பட துறை சம்பந்தமாக அமெரிக்காவில் படித்துவரும் ஹன்சிகா, விரைவில் சொந்த பட நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்க உள்ளார். அவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகள் தெரியும். அந்த மொழி படங்களை மட்டுமே தயாரிப்பாராம்.
சரோஜா, வானம் படங்களில் நடித்த வேகா, இந்தியில் சிட்டகாங் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க்கில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் முதல்படமாக திரையிடப்பட உள்ளது.
சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் சந்தானமும் இணைந்து நடிக்க உள்ளார்.
தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ படத்தில் நந்திதா, பிரியா ஆனந்த் நடிக்கின்றனர்.
சுப்ரமணியபுரம், போராளி படங்களில் நடித்த சுவாதி, மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிஸ்செரி இயக்கும் ‘அமென்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ஏ.ஆர்.ரகுமானுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது. ஹரிஹரன், உதித் நாராயண், நரேஷ் அய்யர், சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment