நடிப்புக்கும் பாடலுக்கும் மட்டுமே இப்போது முக்கியத்துவம் கொடுத்துவருகிறேன் - ஸ்ருதி ஹாசன்!!!

Saturday, 6th of October 2012
சென்னை::நடிப்புக்கும் பாடலுக்கும் மட்டுமே இப்போது முக்கியத்துவம் கொடுத்துவருகிறேன். இசை அமைப்பதை கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறேன் என்று ஸ்ருதி ஹாசன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
இந்தியில் மூன்று படங்களில் நடித்துவருகிறேன். அதில் ஒன்று பிரபுதேவா இயக்குவது. இதன் ஷூட்டிங் புனே அருகில் கிராமம் ஒன்றில் நடக்கிறது. இது அவர் இயக்கிய தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் அதை அப்படியே எடுக்கவில்லை. இந்திக்காக சில மாற்றங்கள் செய்திருக்கிறார். பிரபுதேவாவின் நடனம் எல்லோரையும் போல எனக்கும் பிடித்த விஷயம். இந்தப் படத்தில் சிறப்பாக நடனம் ஆடுவேன் என நினைக்கிறேன். தற்போது நடிப்புக்கும் பாடல் பாடுவதற்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பாடி வருகிறேன். அதுமட்டுமல்லாமல் ஆல்பங்களில் பாடுகிறேன். அதனால் படங்களுக்கு இசை அமைப்பதை கொஞ்சம் தள்ளி வைத் திருக்கிறேன். இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்

Comments