Sunday,14th of October 2012
சென்னை::வருடக்கணக்கில் காத்திருந்தும் பட வாய்ப்புகள் வராததால் மும்பையில் செட்டிலாக முடிவு செய்துள்ளார் சிம்ரன். கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சிம்ரன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தீபக் பகா என்பவரை மணந்தார்.
திருமணத்துக்கு பிறகு மும்பையில் கணவருடன் வாழ்ந்து வந்தார். பின்னர் கோலிவுட் படங்களில் நடிக்கும் எண்ணத்துடன் சென்னையில் குடியேறினார். வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை ஆகிய படங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க அழைத்தபோது மறுத்துவிட்டார். ஹீரோயின் வேடத்தில் அல்லது ஹீரோயினுக்கு இணையான வேடத்தில் நடிக்கவே விரும்புவதாக தெரிவித்தார்.
ஆனால் வாய்ப்புகள் வராததால் விரக்தி அடைந்தார். இனி ஹீரோயின் வாய்ப்புக்கு காத்திருப்பது வீண் என்று சிம்ரன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் மும்பை சென்று செட்டிலாக உள்ளாராம் சிம்ரன்.
Comments
Post a Comment