Thursday,25th of October 2012
சென்னை::'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன் இயக்கும் புது படம் ஒன்றை இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு ஹீரோவாக நடிகர் பிரபுவின் மகனும், 'கும்கி' படத்தின் நாயகனுமான விக்ரம் பிரபு சமீபத்தில் ஒப்பந்தமானார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் பூஜை கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் சரவணன் ஆரம்பித்துள்ளார். சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஒரு படப்பிடிப்பு தளத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (அக்.24) தொடங்கியது. இதில் இயக்குநர் லிங்குசாமி, அவருடைய தம்பியும், தயாரிப்பாளாருமான சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

Comments
Post a Comment