கம‌லி‌ன் அ‌றிவுசா‌ர் பாதுகா‌ப்பு!!!

Tuesday,23rd of October 2012
சென்னை::ஃபிக்கியின் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத்துறை குறித்த இரண்டு நாள் மாநாட்டை சமீபத்தில் நடத்தி முடித்தார் கமல்ஹாசன். இதில் அவர் தெ‌ரிவித்த கருத்துகள் பல்வேறு மட்டத்தில் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. முதலாவதாக,

திரைத்துறையில் அந்நிய முதலீடு.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கொள்ளை அளவில் எதிர்க்கும் கமல்ஹாசன் திரைத்துறையில் அந்நிய முதலீட்டை வரவேற்றுள்ளார். அவரது கனவுகளை நனவாக்க அந்நிய முதலீடு அவசியம். மருதநாயகம் படம் குறித்து கூறும் போது, எனக்கு டால‌ரில் பணம் தேவை என்று கமல் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறார். ஹாலிவுட்டின் பகாசுர நிறுவனங்களால் மட்டுமே அவர் எதிர்பார்க்கிற கோடிகளை கொட்ட முடியும். இது கமலுக்கு மட்டுமல்ல, திரைத்துறையில் பிரமாண்ட படங்கள் எடுக்க விரும்பும் அனைவருக்கும் பொருந்தும்.

மேலும் திரைத்துறையில் அந்நிய முதலீட்டால் பெ‌ரிதாக யாரும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்பதே உண்மை. திரைத்துறை சார்ந்த தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த நிறுவனங்களின் வரவால் அதிக பயனடைவார்கள். தற்போது இருக்கும் திரைப்பட விநியோக முறையில் கண்டிப்பாக மாற்றங்கள் உருவாகும். எந்த முதலீடும் செய்யாமல் படத்தை வாங்கி தியேட்டர்களுக்கு தந்து இடைத்தரகு பெறும் விநியோகஸ்தர்களே இன்று அதிகம். பெ‌ரிய படங்கள் வெளியாகும் போது ஓரளவு நியாயமாக நடந்து கொள்ளும் இவர்கள் மினிமம் மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் விஷயத்தில் சுரண்டல் பேர்வழியாகவே நடந்து கொள்கிறார்கள். இவர்களின் ஆதிக்கம் அந்நிய முதலீட்டின் காரணமாக குறைவது திரைத்துறைக்கு ஆரோக்கியமானதே.

வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்யும் போது பெருவா‌ரியான திரையரங்குகளை லீசுக்கு எடுத்து அதில் தங்கள் படங்களுக்கு அல்லது தங்களுக்கு சாதகமான படங்களுக்கு மட்டும் முன்னு‌ரிமை தரும் ஆபத்து உள்ளது. ஆனால் அந்த ஆபத்து இப்போதும் உள்ளது. சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் போன்ற நிறுவனங்களின் கைவசம் அதிக திரையரங்குகள் இருந்ததை கடந்த ஆட்சியின் போது நாம் கண்கூடாக பார்க்க நேர்ந்தது.



திரையரங்கு சார்ந்த வர்த்தகம் கார்ப்பரேட் அந்தஸ்தை நோக்கி நடைபோடும். அதாவது மல்டிபிளிக்ஸ் போன்ற நவீன திரையரங்குகள் அதிக‌ரிக்கும். இவை நேரடியாக பார்வையாளர்களை சுரண்டக் கூடியவை. மாநில அரசு மனது வைத்தால் இவற்றின் சுரண்டலை கட்டுப்படுத்த முடியும்.

அந்நிய முதலீடு அதிக‌ரிக்கும் போது நம் மண் சார்ந்த கதைகள், படங்கள் அ‌ரிதாகி எங்கும் ஓடக்கூடிய பொதுப்பண்புள்ள திரைப்படங்கள் அதிக‌ரிக்கும் என்பது ஒரு முக்கியமான குற்றச்சாற்று. இதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இப்போதே தமிழில் தயாராகிற படங்களில் 99 சதவீதம் ஹாலிவுட் ஃப்ளேவ‌ரில் உருவாக்கப்படுபவையே. மீதி ஒரு சதவீதம் படைப்பாளியின் சுய உந்துதலால் நிகழக் கூடியவை. அவை எப்போது இருந்து கொண்டிக்கும்.

திரையரங்குகளின் கட்டணம் அங்கு விற்கப்படும் கோலாக்களின் விலையைவிட அதிகமிருக்க வேண்டும் என்று இன்னொரு கருத்தை கூறியிருக்கிறார் கமல்.

Comments