சென்னை::மிரட்டலைத் தொடர்ந்து வினய் நடிக்கும் புதிய படம் ஒன்பதுல குரு. பி.டி.செல்வகுமார் இயக்கும் இப்படம் காமெடி கலந்த கதையில் உருவாகிறது என்றாலும், இளவட்ட ரசிகர்களுக்கு எந்த மனக்குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக பாடல் காட்சிகளில் அஞ்சலி, லட்சுமிராய் இருவரையும் கவர்ச்சிக்கோதாவிலும் இறக்கி விட்டிருக்கிறார்.
காஞ்சனாவுக்குப்பிறகு தான் தொடை தட்டி ஆட்டம் போட சரியான களம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த லட்சுமிராய் இந்த படத்தை சரியாக யூஸ் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அயிட்டம் நடிகைகள் ரேஞ்சுக்கு அத்துமீற திட்டமிட்டிருக்கிறார். இதையறிந்த அஞ்சலி, நானும் எதற்கும் சளைத்தவள் அல்ல என்பதுபோல், பாடல் காட்சிகளில் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று இயக்குனருக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். இதனால் உஷாராகி விட்ட லட்சுமிராய், நடிப்பில் நான் உசத்தி இல்லை என்றாலும், கவர்ச்சியில் எந்த நடிகைக்கும் குறைந்தவள் அல்ல. ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று தனது சகாக்களிடம் சொடக் போட்டு பேசி வருகிறாரா
Comments
Post a Comment