கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'மாற்றான்' 'யு' சான்றிதழ்!

Thursday,4th of October 2012
சென்னை::கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'மாற்றான்' படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், அனைத்து தரப்பினரும் பார்க்ககூடிய 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

சூர்யா - காஜல் அகர்வால் நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் அதிக பொருட்ச் செலவில் தயாரித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

வரும் 12ஆம் தேதியன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கிடையில் படத்தை தணிக்கை குழு அதிகாரிகளுக்காக நேற்று (அக்.3) போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு எந்த இடத்திலும் கட் கொடுக்காமல், யு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்ககூடிய யு சான்றிதழ் படத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால், மாற்றான் படக்குழுவினர் குஷியடைந்திருக்கிறார்கள். மேலும் படத்தின் வியாபாரமும் நல்ல முறையில் நடந்திருக்கிறதாம்.

Comments