Friday,26th of October 2012
சென்னை::த்ரிஷா நடித்த ஜெஸ்சி வேடத்தைவிட என் வேடம் சிறந்தது என்றார் சமந்தா. ‘பாணா காத்தாடி’, ‘நான் ஈ’ படங்களில் நடித்த சமந்தாவுக்கு திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரது தோலில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரின் படங்களில் இருந்து விலகினார். மாதக்கணக்கில் வீட்டில் முடங்கி சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் அவர் பாக்கி வைத்திருந்த காட்சிகளை நடித்து முடித்தார். விரைவில் அப்படம் வெளிவரவுள்ளது. இதுகுறித்து சமந்தா கூறியதாவது: ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் நான் சிறிய வேடத்தில் நடித்திருந்தேன்.
இப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படம் வி.தா.வ. படத்தை காட்டிலும் இன்னும் வரவேற்பை பெறும். யதார்த்தமான படமாக இது உருவாகி இருக்கிறது. வி.த.வ. படத்தில் ஜெஸ்சி என்ற பாத்திரத்தை த்ரிஷா ஏற்றிருந்தார். அந்த கதாபாத்திரத்தைவிட நீ.தா.எ.பொன்வசந்தம் படத்தில் நான் ஏற்றிருக்கும் நித்யா என்ற கதாபாத்திரம் பெரிதும் வரவேற்கப்படும். மறக்கமுடியாத உணர்வுகளை தன்வசமாக்கும் இப்பாத்திரம் ஒவ்வொரு வரின் சிந்தனையிலும் பட்டாம்பூச்சி பறக்கவிடும். வாழ்வின் 4 வித காலகட்டங்களில் நிகழும் சம்பவங்கள் இப்பாத்திரத்தில் இடம்பெறுகிறது. இதை நான் பெற்றது அதிர்ஷ்டம். இந்த படம் அனைவரையும் தங்களின் பழைய வாழ்வை திரும்பிப்பார்க்க வைக்கும். இவ்வாறு சமந்தா கூறினார்.

Comments
Post a Comment