Wednesday,31st of October 2012
சென்னை::கண்டிப்பாக இந்தப் பெயருக்கு நாலு வாரமாவது ஒக்காந்து யோசித்திருப்பார்கள். அப்படியிருந்தும் படத்தின் தொடக்க நாளில் கிளாப் போர்டில் இந்த பெயர் இல்லை. புரொடக் ஷன் நெ. 6 என்றே பெயரிட்டிருந்தார்கள். லிங்குசாமி தயாரிக்க சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படத்தைக் குறித்துதான் சொல்கிறோம்.
எங்கேயும் எப்போதும் படத்தை தந்தவரின் இரண்டாவது படம் என்பதால் ஒரு சின்ன எதிர்பார்ப்பு. பெயரில்லாமல் படத்தை தொடங்கியதில் எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது. படம் தொடங்கிய இரண்டாவது நாள் படத்தின் பெயரை அறிவித்திருக்கிறார்கள். இவன் வேற மாதிரி.
இதை படம் தொடங்கிய அன்றே அறிவித்திருக்கலாம். ஒருவேளை இவன் வேற மாதிரி என்று காட்டுவதற்காக இரண்டு நாள் தள்ளி அறிவித்தார்களோ?
Comments
Post a Comment