மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்குகிறாராம் ஐஸ்வர்யா ராய்?!!!

Tuesday,2nd of October 2012
சென்னை::மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்குகிறாராம் ஐஸ்வர்யா ராய்.
புகழ் பெற்ற நடிகையான ஐஸ்வர்யா ராய், கர்ப்பமான பிறகு நடிப்பதை நிறுத்திவி்ட்டார். குழந்தைப் பெற்ற பிறகு, தாறுமாறாகிவிட்ட உடம்பை சீரமைத்துக் கொள்வதில் படுபிஸியாக உள்ளார்.
இந்த நிலையில் அவரை மீண்டும் நடிக்க வைக்க சில தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

ஒரு நல்ல திரைக்கதை கிடைத்தால் மீண்டும் நடிக்க தயார் என ஐஸ்வர்யா ராய் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தனது பேவரிட் இயக்குநரான மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் ஐஸ்வர்யா ராய்
கடல் படம் முடிந்ததும் இந்தப் படத்தை எடுக்கப்போகிறாராம் மணிரத்னம். ஆங்கில நாவல் ஒன்றை தழுவி எடுக்கப்படும் படம் இது.
ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் இருவர், குரு, ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஐஸ்!

Comments