கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,17th of October 2012
சென்னை::பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமாகும் கும்கி படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது.

ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் சேட்டை பட ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

இசையமைப்பாளர் அனிரூத், சமீபத்தில் தனது பிறந்த நாளை குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

காமெடி நிறைந்த முழுநீள கமர்ஷியல் படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் அமீர்.::

கோலிவுட்டில் வாய்ப்பில்லாததால் மலையாளத்தில் நடித்து வரும் பசுபதி அடுத்து, கனகராகவன் இயக்கும் வியப்தம் என்ற படத்தில் நடிக்கிறார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பியூட்டிபுல் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றிருக்கிறார் நடிகர் மோகன்.

கேடி, ஊ ல ல லா போன்ற படங்களை இயக்கிய ஜோதி கிருஷ்ணா, ஐதராபாத்தை சேர்ந்த பட்டதாரி பெண் ஐஸ்வர்யாவை மணக்கிறார்.

நான் ஈ படத்தின் இந்தி டப்பிங் மக்கீ படத்துக்கு பாலிவுட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. நேரடி இந்தி படத்தை இயக்குமாறு ராஜமவுலியை சில இயக்குனர்கள் வற்புறுத்துகிறார்களாம்.

கார்த்தி, அனுஷ்கா நடித்துள்ள அலெக்ஸ்பாண்டியன் பட டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
 பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் புனே அருகே கிராமத்தில் நடந்தது. அங்கு திடீரென்று பாம்புகள் படையெடுத்ததால் நாயகி ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பட குழு ஓட்டம் பிடித்தது. லோக்கல் பாம்பாட்டிகளை வைத்து பாம்புகளை பிடித்தபிறகே ஷூட்டிங் நடந்தது.

சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த உலக மாநாட்டில் தலாய்லாமாவுடன் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அப்போது ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது இந்தியாதான் என்று ரகுமானிடம் தலாய்லாமா குறிப்பிட்டாராம்.

பாலிவுட்டில் சைப்-கரீனா திருமண விழாவில் சைப்பின் முதல் மனைவி குழந்தைகள் சாரா, இப்ராகிம் பங்கேற்கின்றனர்.

இணையதளத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஹாலிவுட்டில் மிகவும் சக்திவாய்ந்த ஹீரோவுக்கான போட்டியில் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரைக் முதலிடம் பெற்றிருக்கிறார்.

Comments