தீபாவளி ரேஸில் விஜய்-சிம்பு!!!

Monday,1st of October 2012
சென்னை::விஜய் நடிக்கும் படம் ‘துப்பாக்கி'.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் முடிந்தது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. சிம்பு நடிக்கும் படம் ‘போடா போடி'. இப்படம் தொடங்கி வருடக்கணக்கில் ஆகிறது. தயாரிப்பு பிரச்னையால் ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. இதனால் ‘வேட்டை மன்னன்', ‘வாலு' ஆகிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சிம்பு. இதில் ‘வாலு' படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தற்போது இப்படத்தின் தலைப்புக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘போடா போடி' படத்தின் ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டார் சிம்பு. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது என்று சிம்பு தனது இணையதள பக்கத்தில் கூறி இருக்கிறார். இதுபற்றி அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவா கூறும்போது, ‘போடா போடி படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தீபாவளி தினத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படம் ரிலீஸ் ஆக உள்ளது.

அதேநாளில் போடா போடி ரிலீஸ் ஆகிறதா என்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. இது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். சிம்பு இப்படத்தில் கடினமான உழைத்திருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறார். எனவே தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய எண்ணி உள்ளோம் என்றார்.

Comments