Monday,1st of October 2012
சென்னை::ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் படம் ‘சேட்டை’. இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக பட குழுவினருடன், ஆர்யா, ஹன்சிகா உள்ளிட்டோர் சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றனர். அங்குள்ள ஜுரிச் நகரில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ஹன்சிகா தங்குவதற்காக கேரவன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனது கைப்பையில் ஐபோன், ஐபேட், ஐ பாட் மற்றும் வெளிநாட்டு மேக்கப் சாதனங்கள், சுவிஸ்நாட்டு பணம் பிராங்க் மற்றும் அமெரிக்க டாலர் போன்றவற்றை வைத்திருந்தார்.
ஷூட்டிங் முடிந்து மீண்டும் கேரவன் வந்தபோது தனது கைப்பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உதவியாளரிடம் கேட்டபோது அதுபற்றி தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார். வேன் முழுவதும் தேடியும் பை கிடைக்கவில்லை. இதையடுத்து ஜுரிச்சில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஹன்சிகா புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி ஹன்சிகா கூறும்போது, ‘எனது கைப்பை காணாமல் போனது அதிர்ச்சியாக இருக்கிறது. ஏற்கனவே திருட்டு சம்பவம் பற்றி எச்சரித்திருந்தார்கள். கவன குறைவாக இருந்துவிட்டேன்’ என்றார்.

Comments
Post a Comment