ரூ.75 லட்சம் மோசடி செய்ததாக இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் மீது புகார்!

Thursday,25th of October 2012
மும்பை::தயாரிப்பாளர் சச்சின் ஜோஷியை ஏமாற்றி ரூ.75 லட்சத்தை அபேஸ் செய்துவிட்டதாக இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் மீது புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில் சச்சின் ஜோஷி தயாரிக்கவிருந்த ஒரு புதுபடத்தில் நடிக்க மல்லிகா ஷெராவத்தை ஒப்பந்தம் செய்தார். மல்லிகாவுக்கு முன்பணமாக ரூ.75 லட்சம் கொடுத்துள்ளார் சச்சின் ஜோஷி. ஆனால் ஒப்பந்தப்படி மல்லிகா ஷெராவத் படத்தில் நடிக்கவில்லை.

எனவே பணத்தை திருப்பி தரும்படி பலமுறை கேட்டும் அவர் பணத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து சச்சின் தற்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் பணத்தை திரும்பப் பெற்று தருமாறு கேட்டுள்ளார். சச்சின் ஜோஷி கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக மும்பை திரையுலக பிரபலங்களை வைத்து பேசி வருகிறேன். ஆனால் இதுவரை பணம் திரும்பக் கிடைக்கவில்லை. எனவே சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன் என்றார்.

Comments