இன்று 70-வது பிறந்தநாள் கொண்டாடும் அமிதாப்பச்சனுக்கு ரஜினி வாழ்த்து!!!

Thursday,11th of October 2012
சென்னை::இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் உள்ள திரைப்பட நகரில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தன.

காலை 8.30 மணிக்கு அமிதாப்பச்சன் அங்கு வந்தார். முழங்கால் அளவுக்கு நீண்ட கறுப்பு வெல்வெட் குர்தா அணிந்து இருந்தார். அவருடன் மகன் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யாராயின் கையை பிடித்தபடி நடந்து வந்தார்.

இன்னொரு புறம் மனைவி ஜெயாபச்சன், மகள் ஸ்வேதா நந்தா ஆகியோர் வந்தனர். மேடைக்கு வந்ததும் அங்கு திரண்டு நின்ற நடிகர், நடிகைகள் மற்றும் உறவினர்களை பார்த்து கையசைத்தார். அவர்கள் முன்னிலையில் கேக் வெட்டினார்.

பின்னர் பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தார். அபிஷேக்பச்சன் கூறும்போது, எனது தந்தைக்கு கவர்ச்சியான 70 வயது. அவரது பிறந்தநாளை கொண்டாடுவதில் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

ஐஸ்வர்யாராய் கூறும்போது, அமிதாபச்சன் பிறந்தநாள் விழாவுக்கு எல்லோரும் வந்து இருப்பது சந்தோஷமாக உள்ளது. அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு நேரில் வாழ்த்தினர். பிரபல நடிகர் திலீப்குமார் மனைவி சயீராபானுவுடன் வந்து வாழ்த்தினார். அவர்கள் கால்களை அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் தொட்டு வணங்கினர்.

நடிகர் சசிகபூர் சக்கர நாற்காலியில் வந்து வாழ்த்தினார். தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, ஆதித்யா காத்ரேஜ், குமார் மங்கலம் பிர்லா, முலாயம்சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ், உத்தவ் தாக்கரே ஆகியோரும் நேரில் வாழ்த்தினர்.

வினோத் கன்னா, ஹேமமாலினி, ஜிதேந்திரா, ரந்தீர்கபூர், ரிஷிகபூர், ஸ்ரீதேவி, போனிகபூர், பிரீத்திஜிந்தா, வித்யாபாலன், பிபாசாபாசு, சஞ்சய் தத், மாதுரி தீட்சித், அஜய் தேவ்கான், கஜோல், ஜுகி சாவ்லா, அனில்கபூர், தீபிகா படுகோனே, கோவிந்தா உள்பட பலர் நேரில் வாழ்த்தினர்.

Comments