துப்பாக்கி, கும்கி, போடா போடி உள்பட 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்!!!

Monday,22nd of October 2012
சென்னை::தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 13-ந் தேதி எத்தனை படங்கள் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொண்டு உள்ளது. ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம்’ படங்கள் தள்ளிப்போகின்றன. பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் ‘மாற்றான்’ தீபாவளி போட்டியில் பங்கேற்காமல் முன்கூட்டியே ரிலீசாகி விட்டது.

தற்போதைய நிலவரப்படி ‘துப்பாக்கி‘, ‘கும்கி‘, ‘போடா போடி‘, ‘அம்மாவின் கைப்பேசி‘, ‘கள்ளத்துப்பாக்கி’, ‘அஜந்தா’, ‘லொள்ளு தாதா பராக்பராக்’ ஆகிய 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது.

‘துப்பாக்கி’யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. ‘போடா போடி’யில் சிம்பு நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். காதல் கதையாக தயாராகியுள்ளது. ‘கும்கி’ படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். யானையை அடக்கும் இளைஞனை பற்றிய கதை. லிங்குசாமி இப்படத்தை தயாரித்துள்ளார்.

‘அம்மாவின் கைபேசி’ படம் தாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். ரவிதேவனின் ‘கள்ளத்துப்பாக்கி’ திரில்லர் படமாக தயாராகியுள்ளது. ‘லொள்ளு தாதா பராக் பராக்’ படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்து வட்டியை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகியுள்ளது. ‘அஜந்தா’ படத்தை ராஜ்பா ரவிசங்கர் திருமால் இயக்கியுள்ளனர். காதல் கதையாக தயாராகியுள்ளது.
27-7-12_findyour_INNER_468x60.gif

Comments