4 மொழியில் 1300 தியேட்டர்களில் ஜேம்ஸ்பாண்ட்!!!

Tuesday,30th of October 2012
சென்னை::ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரெய்க் நடித்துள்ள ஸ்கை ஃபால் இந்தியாவில் நாளை மறுநாள் 1300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. சாம்  மெண்டஸ் இயக்கி இருக்கிறார். ஹீரோவுக்கு சமமான வில்லன் வேடத்தில் சேவியர் பேர்டம் நடித்திருக்கிறார். வித்தியாசமான தோற்றத்துக்காக தனது  தலைமுடியை வெள்ளையாக மாற்றிக் கொண்டிருக்கிறார். நயோமி, பெர்னிஸ் மர்லோஹி ஹீரோயின்கள். ‘ஸ்கை ஃபால் படத்துக்கு ஏதேச்சையாக பல  பெருமைகள் வந்து சேர்ந்து கொண்டன. முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் 1962ல் வெளிவந்தது. அதன்படி இது ஜேம்ஸ்பாண்ட் படத்தின் பொன் விழா ஆண்டாகும்.

லண்டனில் ஷூட்டிங் தொடங்கி கிரீன் விச் ஓல்டு ராயல் நேவல் கல்லூரி உள்ளிட்ட பல இடங்கள் துருக்கியில் ஸ்பைஸ் பஜார், கிராண்ட் பஜார் போன்ற  வணிக வளாகங்கள் மூடப்பட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது. அதற்கான வியாபார இழப்பீடுக்காக தினமும் குறிப்பிட்ட தொகை பட நிறுவனம் வழங்கியது.  சீனாவில் ஷாங்காய் நகர் ஏர்போர்ட், ஜப்பானில் நாகசாகி கடற்கரை பகுதி, ஹாஷிமா தீவு உள்ளிட்ட இடங்களிலும் மொத்தம் 133 நாட்கள் ஷூட்டிங்  நடந்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழிகளில் 1300 தியேட்டர்களில் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் ரிலீஸ் செய்கிறது.

Comments