விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-3: முதல் பரிசை வென்றார் ஆஜித்!!!

Saturday,27th of October 2012
சென்னை::விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-3 கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் போட்டியாளர்களை தேர்வு செய்தனர். இறுதியில் 25 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல சுற்றுகள் மூலம் இறுதிப்போட்டிக்கு 5 பேர் தகுதிப்பெற்றனர்.
தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-3 இறுதி போட்டி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரகுமான், மனோ, சித்ரா, மால்குடி சுபா மற்றும் பலர் முன்னிலையில் போட்டியாளர்களான யாழினி, ஆஜித், சுகன்யா, பிரகதி, கௌதம் ஆகியோர் தனது திறமைகளை வெளிப்படுத்தினர். எஸ்.எம்.எஸ். மூலம் முதல் இடத்தைப் பிடிதவரை ஏ.ஆர். ரகுமான் அறிவித்தார்.
5 பேர்களில் ஆஜித்யை ஏ.ஆர். ரகுமான் வெற்றி பெற்றவராக அறிவித்தார். இவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு பெற்ற பிரகதிக்கு 5 லட்சம் மதிப்புள்ள பரிசும், 3-வது பரிசுப்பெற்ற யாழினிக்கு 3 லட்சம் மதிப்புள்ள பரிசும், 4-வது பரிசுகள் பெற்ற சுகன்யா மற்றும் கௌதமுக்கு 2 லட்சம் மதிப்புள்ள பரிசும் வழங்கப்பட்டது....


சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை வெல்வதற்காக ஒர் ஆண்டுக்கும் மேலாக தினந்தோறும் தங்களின் இனிய குரலால் பாடி பல்லாயிரக்காணவர்களை வசீகரித்த குழந்தைகள் காத்திருந்தது அந்த தருணத்திற்காகத்தான்.
இறுதிப்போட்டியில் சிறப்பாகப் பாடி எப்படியாவது பட்டத்தை வென்றுவிடவேண்டும் என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் கனவும், லட்சியமும் இருந்தது. அதற்கான நாளும் வந்தது.
நேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சுகன்யா, பிரகதி, கவுதம், ஆஜீத், யாழினி ஆகிய 5 போட்டியாளர்களும் தங்களின் மிகச்சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தினர். ஒவ்வொருவரும் பாடி முடித்த உடன் பார்வையாளர்களின் கரகோஷம் அரங்கத்தை எட்டியது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வந்திருந்து குழந்தைகளின் குரலில் வெளிப்பட்ட பாடல்களை ரசித்து சிரித்தார்.

அனைவருமே நன்றாக பாடினர் என்றாலும் பரிசு ஒருவருக்குத்தானே தரமுடியும். நடுவர்களின் மதிப்பெண்களோடு, உலகம் முழுவதும் இருந்த ரசிகர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டளித்து தேர்ந்தெடுத்த தமிழகத்தின் செல்லக்குரலை இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அறிவித்தார். சிறுவயதில் மைக்கேல் ஜாக்சனின் திறமை அந்த சிறுவனிடம் வெளிப்பட்டதாக தெரிவித்ததும் அரங்கமே ஊகித்துவிட்டது.
ஆஜித் பாடிய வந்தேமாதரம் பாடல் நடுவர் ஏ.ஆர். ரகுமானை மட்டுமல்ல ஒவ்வொரு ரசிகரையும் கவர்ந்துவிட்டதுபோல... ஆஜித் முதல் இடம் பெற்றுள்ளதாக பலத்த கரகோஷத்திற்கு இடையே அறிவித்தார் ஏ.ஆர்.ரகுமான். சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்துடன் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டிற்கான சாவியை ஆஜித்திற்கு வழங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இரண்டாவது இடம் பெற்ற பிரகதிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. மூன்றாவது இடம் பிடித்த யாழினிக்கு 3 லட்சம் ரூபாய் பரிசும், நான்கு, ஐந்தாம் இடம் பிடித்த சுகன்யா, கவுதமிற்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஓர் ஆண்டுகாலம் பாடி ரசிகர்களை சந்தோசப்படுத்திய செல்லக்குரல்கள் சீசன் 3 நேற்றோடு முடிவுக்கு வந்தது இசை ரசிகர்களுக்கு வருத்தமான விசயம்தான்.
கவலைப்படாதீர்கள் சூப்பர் சிங்கர் சீசன் 4 இன்னும் சில தினங்களில் விஜய் டிவியில் தொடங்கப்போகிறது.
27-7-12_findyour_INNER_468x60.gif

Comments