3 ஹீரோயின்களை இயக்குவது கடினமா? சினேகா பிரிட்டோ!!!

Monday,15th of October 2012
சென்னை::3 ஹீரோயின்களை இயக்குவது கடினமா என்பதற்கு பதில் அளித்தார் இயக்குனர் சினேகா. எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சினேகா பிரிட்டோ. இவர் சட்டம் ஒரு இருட்டறை படத்தை அதே பெயரில் ரீமேக் செய்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படம் ‘சட்டம் ஒரு இருட்டறை. இப்படத்தை ரீமேக் செய்கிறேன். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி சிலர் தப்பிக்கின்றனர். அதை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காலத்துக்கு ஏற்ப திரைக்கதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமன், பிந்து மாதவி, பியா, ரீமா சென் நடிக்கின்றனர். இப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடித்திருப்பது பற்றி கேட்கிறார்கள். பாரபட்சம் இருந்தால் மட்டுமே பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது. மூன்றுபேருக்குமே படத்தில் சம வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவர்களை இயக்கியதில் எந்த சிக்கலும் இல்லை. இதன் ஷூட்டிங் ஹாங்காங், ஜலாமாவன் தீவு உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது. ஒளிப்பதிவு சி.ஜே.ராஜ்குமார். இசை விஜய் ஆண்டனி. தயாரிப்பு எஸ்.ஏ. சந்திரசேகரன், விமலா.

விரைவில் இதன் ஆடியோ ரிலீஸ் நடக்க உள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே திறமை போட்டி நடத்தி உள்ளோம். அவர்களுடன் நேற்று கலந்துரையாடல் நடந்தது. தேர்வு செய்யப்பட்டவர்கள், இந்நிகழ்ச்சியில் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். இவ்வாறு சினேகா பிரிட்டோ கூறினார்.

Comments