லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஆரோகணம்' அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது!

Wednesday,10th of October 2012
சென்னை::நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முதல்முதலாக இயக்கியுள்ள ஆரோகணம் திரைப்படம் வரும் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது.

தமிழில் மிக குணசித்திர நடிகைகளில் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு நடிப்பு தவிர மேலும் பல திறமைகளும் உண்டு.

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் 'ஆரோகணம்' படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

நாடோடிகள், யுத்தம் செய் உள்ளிட்டப் படங்களில் நடித்திருக்கும் லஷ்கி ராமகிஷ்ணன், 'ஆரோகணம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.

அம்மாவுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பந்தத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் விஜி சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறர். இவருடன் ஜெயப்பிரகாஷ், உமா பத்மநாபன், ராஜி விஜயசாரதி, சம்பத், புதுமுகங்கள் விரேஷ், ஜெய் குஹேனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஏவிஏ புரொடக்ஷன்ஸ் சார்பாக அனுப் மற்றும் மங்கி கிரியேட்டிவ் லேப் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஜே.எஸ்.கே பிலிம் கார்பொரேசன் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

கே.பாலச்சந்தர் உள்ளிட்ட திரை சாம்பாவான்களின் பாராட்டைப் பெற்றிருக்கும் 'ஆரோகணம்' படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Comments