Wednesday,31st of October 2012
சென்னை::நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு ரூ.25 கோடியாக உயர்ந்துள்ளது. பணக்கார நடிகையாக மாறியுள்ளார்.
நடிகைகளின் சினிமா வாழ்க்கை குறுகியது. எனவே புத்திசாலித்தனமாக பலர் தங்கள் சம்பாத்தியத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். சிம்ரன் முன்னணி நடிகையாக இருந்த போது நிறைய நிலங்கள், வீடுகள் வாங்கினார். அவரைப் போலவே திரிஷா, நமீதா போன்றோர் சொத்துக்கள் வாங்கி வருகிறார்கள்.
அனுஷ்காவும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். இவர் இதுவரை 300 படங்கள் நடித்துள்ளார். அவற்றில் தமிழ் படங்களில் நடித்தது மொத்தம் 10. இதில் 'சிங்கம்', 'வானம்', 'தெய்வத்திருமகள்', 'சகுனி', 'வேட்டைக்காரன்' போன்றவை முக்கிய படங்கள்.
சினிமாவில் அறிமுகமான போது அனுஷ்காவின் சம்பளம் ரூ.40 லட்சமாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு படத்துக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் சம்பளம் வாங்குகிறார். சம்பள பணத்தை எல்லாம் நிலத்தில் போட்டுள்ளார்.
விசாகபட்டிணத்தில் உள்ள மதுரவாடா, ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதிகளில் வீட்டு மனைகள் வாங்கியுள்ளார். சொந்த ஊரான பெங்களூரிலும் நிலங்கள் வாங்கியுள்ளார்.
அனுஷ்கா முதலீடு செய்துள்ள நிலங்கள் அனைத்தும் வேகமாக விலையேறும் பகுதிகளில் உள்ளன. எனவே தற்போது ரூ.25 கோடியாக இருக்கும் இந்த சொத்துக்களின் மதிப்பு ஒரிரு வருடங்களில் பல மடங்கு உயரும் என்கின்றனர்.
Comments
Post a Comment