Monday,22nd of October 2012
சென்னை::நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்று தந்த படம் 'நாயகன்'. இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதை தொடர்ந்து, அப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கமல்ஹாசன், கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
நாயகர்க்கு நன்றி! என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்:
நல்ல சினிமா செய்வதற்கு, தடைகள் நிறையவும் ஆதரவு கொஞ்சமும் இருக்கத்தான் செய்கிறது.
எங்கள் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வயது இருபத்தைந்து. சகாக்கள் மணிரத்தினம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், தோட்டா தரணி, பாலகுமாரன், புதுமைப்பித்தன், சரிகா இவர்கள் போக, அமைதியாய் தொண்டரடி பொடியாய் வேலை செய்தவர்களையும் ஆரம்பத்திலிருந்தே ஆதரவும், மூலதனமும், விமர்சனமும், கோபமும் கண்டிப்பும் நிறைந்த முக்தா ஸ்ரீநிவாசனையும், தன் கர்மத்தை செய்து காலமான திரு.இராமசாமியையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மற்றவர்கள் எல்லம் எங்கள் வேலை முடிந்ததும் சம்பாதிக்க வந்து ஜெயிச்சவர்கள். அவர்களையும் மறக்கவில்லை நான். உன்னதமாக, ரசிகர்களுக்கு நாயகன் கதையை உலகறியவைத்த மெயக்கதாசரியர்கள் அவர்களே
என்றென்றும் எங்கள் நன்றி அவர்களுக்கு செலுத்துகிறோம் என்பதற்கு சான்று, மணியும் நானும் தொடர்ந்து நல்ல சினிமா கொடுக்க எடுக்கும் முயற்சிகள் தான்.
ஒரு நல்ல ரசிகனாக கடலும், விஸ்வரூபமும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
இவ்வாறு அந்த கடித்தத்தில் கமல் எழுதியிருந்தார்.

Comments
Post a Comment