சில்க் ஸ்மிதாவாக நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு: ரூ.2.5 கோடி சம்பளம் தருவதாக தயாரிப்பாளர் உறுதி!!!

Wednesday,10th of October 2012
சென்னை::தற்கொலை செய்து இறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘டர்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் தயாரானது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். மிலன் ருத்ரியா இயக்கினார். ஏக்தா கபூர் தயாரித்தார்.

இப்படம் கடந்த டிசம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ. 18 கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூ. 117 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. இதில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

‘டர்டி பிக்சர்’ படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கான நடிகர், நடிகை தேர்வு நடந்து வருகிறது, சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசினர். அவருக்கு ரூ. 2.5 கோடி சம்பளம் தர தயாரிப்பாளர் ஏக்தா கபூர் முன் வந்தார். இது பெரிய தொகையாகும். இரு மொழிகளுக்கும் சேர்த்து இத்தொகையை பேசினார். ஆனால், இப்படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதிக்கவில்லை. அந்த படத்தில் நடிக்கவில்லை என்று நயன்தாரா கூறினார்.

‘டர்டி பிக்சர்’ படத்தில் கவர்ச்சி காட்சிகள் உள்ளன. உடை குறைப்பு மற்றும் நெருக்கமான காதல் சீன்களும் இருக்கிறது. எனவேதான் இதில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
27-7-12_findyour_INNER_468x60.gif

Comments