தற்போது பட வாய்ப்புகள் தேடி வரும் வடிவேலுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது: இம்சை அரசன் 23ம் புலிகேசி - 2!!!
Monday,22nd of October 2012
சென்னை::இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் மெகா ஹட் ஆனது. இதனையடுத்து தற்போது பட வாய்ப்புகள் தேடி வரும் வடிவேலுக்கு மீண்டும் ஒர நல்ல செய்தி வந்திருக்கிறது. 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் 2ம் பாகம் எடுக்கும் முயற்சியில் இயக்குனர் சிம்புதேவன் இறங்கியுள்ளார் என்பது தான் அந்த நல்ல செய்தி. இதுபற்றி இயக்குனர் சிம்புதேவன் கூறுகையில், 'இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நிறைய காட்சிகள் எடுக்க முடியாமல் போனது, அதை தற்போது கருத்தில் கொண்டு 2 பாகத்தை தயார் செய்து வருகிறேன், இதுபற்றி வடிவேலுவிடம் பேசியுள்ளேன், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்' என்றார்.
Comments
Post a Comment