Saturday,27th of October 2012
சென்னை::சிந்து சமவெளி’ படம் மூலம் அறிமுகமானவர் அமலாபால். ‘மைனா’ படம் அவரை பிரபலபடுத்தியது. தற்போது முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். நேற்று தனது 21-வது பிறந்த நாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.
திரையுலக அனுபவங்கள் பற்றி அவர் சொல்கிறார்.
சினிமாவில் நான் கடினமாக உழைக்கிறேன். எந்த நடிகையையும் போட்டியாக நினைக்கவில்லை. விதிப்படி எனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். கடவுளை நான் நம்புகிறேன். அது போல் எல்லா மதங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு.
உணவு கட்டுப்பாடு எதையும் கடைபிடிப்பது இல்லை. படத்துக்கு தேவை என்றால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பேன். போலியான மனிதர்களை எனக்கு பிடிக்காது. அவர்களை வெறுக்கிறேன்.
சமீபத்தில் பட்டணப் பிரவேசம் என்ற மலையாள படம் பார்த்தேன். கடைசியாக நான் சிரித்து ரசித்து பார்த்த படம் அது. நண்பர்கள் நம் வாழ்க்கையின் இறுதி வரை வருபவர்கள். எனக்கு சாப்பிடவும் சினிமா பார்க்கவும் பிடிக்கும். சமீபத்திய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘பர்பி’. அந்த படத்தில் நானும் இருக்க விரும்பினேன்.

Comments
Post a Comment