Wednesday,24th of October 2012
சென்னை::தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மந்த்ரா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார். குடும்பத்தினருடன் பெங்களூரில் வசித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு “ஒன்பதுல குரு” படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். நீலாம்பரி கேரக்டரை போல் திமிர் பிடித்த வில்லி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பி.டி. செல்வகுமார் இயக்குகிறார்.
மந்த்ரா நடிக்கும் காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இப்படத்தில் வினய், பிரேம்ஜி, சத்யன், அரவிந்த், ஆகாஷ் சாம்ஸ், லட்சுமிராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மந்த்ரா நடிக்கும் காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இப்படத்தில் வினய், பிரேம்ஜி, சத்யன், அரவிந்த், ஆகாஷ் சாம்ஸ், லட்சுமிராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Comments
Post a Comment