ஓசூர் நகர, ஒன்றிய தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம் சார்பில், 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 15 ஏழைப்பெண்களுக்கு, இன்று காலை விஜய் திருமணம்நடத்தி வைத்தார்!!!
Monday,29th of October 2012
சென்னை::ஓசூர் நகர, ஒன்றிய தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம் சார்பில், 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 15 ஏழைப்பெண்களுக்கு, இன்று காலை திருமணம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் தேன்கனிக்கோட்டை சாலையில், பரிமளம் பள்ளி அருகே உள்ள காயத்ரி ப்யூல்ஸ் மைதானத்தில், இந்த திருமணம் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் கலந்து கொண்டு, 15 ஏழைப்பெண்களுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார்.
அவர் தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுத்தார். அப்படி 15 மணமகன்கள் கையிலும் தாலி எடுத்து கொடுத்தார். அவர்கள் மணமகள் கழுத்தில் கட்டினர். திருமணத்தை நடத்தி வைத்த பிறகு அவர் மேடையில் பேசி விட்டு சீர்வரிசை பொருட்களை கொடுக்க திட்டமிடடு இருந்தார். ஆனால் மைக் வேலை செய்யவில்லை.
45 நிமிடம் வரை அவர் காத்து இருந்தார். ஆனால் மைக்கை சரி செய்ய முடியவில்லை. இதனால் மேடையில் பேசாமல் அங்கு இருந்து சென்று விட்டார். முன்னதாக சென்னையில் இருந்து கார் மூலம் ஒசூர் வந்த நடிகர் விஜய்யை ஓசூர் அருகே பேரண்டபள்ளியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அவரை பொன்னாடை அணிவித்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர்.
பின்னர் அவர் காரில் புறப்பட்டு காலை 10-15 மணிக்கு திருமண விழா நடக்கும் மேடைக்கு வந்தார். அவர் வந்ததும் ரசிகர்கள் கை தட்டியும், விசில் அடித்தும் வரவேற்றனர். பின்னர் அவர் ரசிகர்களை பார்த்து கைகூப்பி மகிழ்ச்சி தெரிவித்தார். அதன் பிறகு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பேசினார்கள். விஜயும் அடிக்கடி மேடையில் இருந்து எழுந்து நின்று ரசிகர்களுக்கு கை காட்டினார்.
ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆனந்த், மாநில செயலாளர் ரவிராஜா, கரூர் மாவட்ட நற்பணி இயக்க செயலாளர் வி.பி. மதியழகன், சேலம் மாவட்ட தலைவர் தமிழன் ஆ. பார்த்திபன், ஆவடி நகர தலைவர் ராஜேஷ், கர்நாடக, மாநில தலைமை நற்பணி இயக்க நிர்வாகிகள் தேவா, ராஜா.. ஓசூர் நகர தலைவர் வடிவேல், ஒன்றிய தலைவர் சுரேஷ்…மற்றும் நற்பணி இயக்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை, ஓசூர் நகர தலைவர் வடிவேல், ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment