Saturday,20th of October 2012
சென்னை::கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம் படத்துக்கு 14 காட்சிகளுக்கு கட் கொடுத்த¤ருக்கிறது சென்சார் போர்டு. ‘மன்மதன் அம்பு படத்துக்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘விஸ்வரூபம். இப்படத்தை தயாரிப்பதுடன் கதை எழுதி இயக்குனர் பொறுப்பும் ஏற்றுள்ளார். ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜா குமார், ஜெய்தீப், சாம்ராட் சக்ரபர்த்தி, ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலிவுட் இயக்குனர் ஷேகர் கபூர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ஷங்கர் எஹசான் லாய் இசை அமைத்துள்ளனர்.
தீவிரவாதத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து கடந்த 17ம் தேதி சென்சார் சான்றிதழுக்காக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் தனியாக ஆலோசனை நடத்தினர். பின்னர் படத்தின் சில காட்சிகளை வெட்ட வேண்டும் என்று தெரிவித்தனர். அக்காட்சிகளுக்கு கமல் விளக்கம் அளித்தார். அதில் சிலவற்றை ஏற்றுக்கொண்டனர். குறிப்பிட்ட 14 காட்சிகளுக்கு கட் கொடுத்தனர். நான்கெழுத்து வசனம் ஒன்றை சைலன்ட் செய்ய கூறினர். அதை கமல் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசம்பரில் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments
Post a Comment